ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 29. 6 .2022 முதல் 12. 7 2022 வரை 14 நாட்களில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம் அதனை நேற்று 13 .7. 2022 காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிவன் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு ,அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு முன்னிலையில் உண்டியல்களை திறக்கப்பட்டு அதிலிருந்த பணம், தங்கம் மற்றும் வெள்ளியை கணக்கிடப்பட்டது . அதில் பணமாக ஒரு கோடியே 51 லட்சத்து 64 ஆயிரத்து 316 ரூபாய், தங்கம் :160.கிராம், வெள்ளி : 336 கிலோ அமெரிக்கா ,மலேசியா ,சிங்கப்பூர் கனடா போன்ற வெளி நாடுகளில் இருந்து 17 வெளிநாட்டு (பணம்) டாலர்கள் இருந்ததாக கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தெரியப்படுத்தினார் .இந்நிலையில் கடந்த 29.6 .2022 அன்று கடைசியாக உண்டியல் பணம் கணக்கீடு நடைபெற்றதாக கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு தெரியப்படுத்தினார்.