திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் தேரோட்டம்
ADDED :1188 days ago
சிவகாசி: திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோத்ஸவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா ஜூலை 7 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை நடந்தது. இரவு சிம்ம வாகனம், சேச வாகனம், கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். முக்கிய நிகழ்ச்சியான 9 ம் நாள் திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. மேயர் சங்கீதா வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். பெண்களின் கோலாட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.