கருப்பந்துறை அழியாபதீஸ்வரர் கோயில் வருஷாபிஷேகம்
ADDED :1510 days ago
திருநெல்வேலி: நெல்லைடவுன் அருகேயுள்ளகருப்பந்துறை சிவகாம சுந்தரி அம்பாள் சமேத அழியாபதீஸ்வரர் கோயில் 8ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை கோயிலில் கும்பம் வைத்து சிறப்பு ஹோமம், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அண்ணாமலையார் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.