சங்கடஹர சதுர்த்தி : விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜை
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் கனவில் வந்த கணேசர் கோயில் உள்ளது. சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை மூலவருக்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். கணேச பஞ்ச ரெத்தினம், நாமாவளி உள்ளிட்டவைகளை பக்தர்கள் பாடினர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சரவணன் செய்திருந்தார்.
* மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் உள்ள கன்னிமூல விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டினர் செய்திருந்தனர். *ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உள்ள வல்லபை விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.