உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வதிஷ்டபுரம் முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

வதிஷ்டபுரம் முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

திட்டக்குடி: திட்டக்குடி வதிஷ்டபுரம் முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திட்டடக்குடி வதிஷ்டபுரம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி அம்மன் சிறப்பலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏழாம் நாள் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் சுமந்துவந்தும், தீச்சட்டி ஏந்திவந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழாவையொட்டி, அம்மன் சிறப்பலங்காரத்தில் எழுந்தருளினார். தீமிதி திருவிழாவையொட்டி, ஏரிக்கரையிலிருந்து சக்தி கலசம் எடுத்து வரப்பட்டது. மாலை 6.00மணிக்கு சக்தி கலசம் ஊர்வலமாக வந்து, அக்னி குழியில் இறங்கியது. தொடர்ந்து பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !