அருணாசலேஸ்வரர் கோவிலில் தட்சிணாயன புண்யகால தீர்த்தவாரி
ADDED :1289 days ago
திருவண்ணாமலை,: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று, தட்சிணாயன புண்ணியகால தீர்த்தவாரி நடந்தது.
சூரியன் வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி நகரும் காலமான தட்சிணாயன புண்ணிய காலத்தை வரவேற்கும் விதமாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி பிரமோற்சவ விழா நடந்தது. நேற்று விழா நிறைவாக, அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி சந்திரசேகரர் (அருணாசலேஸ்வரர் நிற்கும் கோலம்), பராசக்தி அம்மன், அய்யங்குளக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் சூல ரூபத்தில் அய்யங்குளத்தில் சந்திரசேகரருக்கு தட்சிணாயன புண்ணியகால தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.