காளஹஸ்தி சிவன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி ஹோமம்
ADDED :1173 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி ஹோமம் கோயில் வளாகத்தில் உள்ள அஞ்சி அஞ்சி விநாயகர் சன்னதியில் நடைபெற்றது. இன்று சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் சாஸ்திர பூர்வமாக நடத்தப்பட்டது .இந்த ஹோம பூஜை நிகழ்ச்சிக்கு ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு ஹோம பூஜையில் ஈடுபட்டார். முன்னதாக கோயில் வேத பண்டிதர்கள் கலச ஸ்தாபனம் செய்ததோடு ஹோம பூஜைகளை சாஸ்திர பூர்வமாக நடத்திய பின்னர் எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்ததோடு சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர்.