நல்ல மணவாழ்க்கைக்கு... ‘முளைப்பாலிகை’
ADDED :1255 days ago
அம்மன் கோயில்களில் முளைப்பாரிக்கு தனியிடம் உண்டு. இதனை ‘முளைப்பாலிகை’ என்று சொல்வதே சரி. பேச்சு வழக்கில் முளைப்பாரி என்கிறோம். நெல்லின் நாற்று காற்றில் அசைவது போல், முளைப்பாரியும் அலையலையாய் ஆடி அசையும் அழகே அழகு! பெண்கள் இதைச் சுமந்து செல்லும் போது அம்மனின் அம்சமாக கருதி பரவசத்துடன் வழிபடுவர். வெறும் அலங்காரம், அழகிற்காக மட்டும் முளைப்பாரியைச் சுமப்பது கூடாது. முளைப்பாரி எப்படி செழித்து உயரமாக வளர்கிறதோ, அது போல குடும்பம் தழைக்கும் என்பர். கன்னியர் முளைப்பாரி எடுத்து வந்தால் நல்ல மணவாழ்க்கை அமையும்.