ஒட்டன்சத்திரம் அம்மன் கோயில்களில் ஆடிப் பிறப்பு சிறப்பு பூஜை
ADDED :1174 days ago
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடிப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாம்பாறை முனியப்பன் கோயிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று முனியப்பசுவாமியை வழிபட்டுச் சென்றனர்.