உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லியனூர் சிவசுப்ரமணிய கோவிலில் 108 பால் குட அபிஷேகம்

வில்லியனூர் சிவசுப்ரமணிய கோவிலில் 108 பால் குட அபிஷேகம்

வில்லியனூர்: வில்லியனூர், சுந்தரமூர்த்தி விநாயகபுரத்தில் உள்ள சிவசுப்ரமணிய கோவிலில் 108 பால் குட அபிஷேகம் நடந்தது. இக்கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு 13ம் ஆண்டு 108 பால் குட அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் ஏராளமான பெண்கள் பால் குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். விழா ஏற்பாடுகளை முருகன் கோவில் முன்னாள் நிர்வாகத் தலைவர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !