உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் ஆடி கார்த்திகை விழா

தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் ஆடி கார்த்திகை விழா

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் ஆடி கார்த்திகை விழா நடந்தது.திருவிளக்கு பூஜை, அபிஷேக ஆராதனையுடன், பாலாபிஷேகம் நடந்தது. சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவர் மலைக்கோயிலில் வலம் வருதல் தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.ஒட்டன்சத்திரம்: குழந்தைவேலப்பர் கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு குழந்தை வடிவத்தில் வீற்றிருக்கும் முருகனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடந்தது. காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !