மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் ஆஸ்திரேலிய குழு நடை பயணம்
ADDED :1226 days ago
சென்னை :தமிழகம் வந்துள்ள, ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பாரம்பரிய நடைபயணம் மேற்கொண்டனர். ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஹான் ரோகர் குக் தலைமையில், மேற்கு ஆஸ்திரேலிய அரசின் முக்கிய பிரமுகர்கள் கொண்ட குழு தமிழகம் வந்துள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்த தந்த அக்குழுவினரை, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வரவேற்றார். பின், பாரம்பரிய நடை பயணமாக, கபாலீஸ்வரர் கோவில் உட்பிரஹாரம், மாடவீதிகள், குளக்கரைகளை வலம் வந்தனர். அக்குழுவினருக்கு சுற்றுலா வழிகாட்டிகள் வாயிலாக, கோவில் தல வரலாறு, கட்டக கலையின் சிறப்புகள், வழிபாட்டு முறைகள், ஆகம அமைப்புகள் குறித்து விபரிக்கப்பட்டது.