உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்ணாம்பிகை மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

சொர்ணாம்பிகை மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

தியாகதுருகம்: தியாகதுருகம் சொர்ணாம்பிகை மாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு நடத்தினர். தியாகதுருகத்தில் உள்ள சொர்ணாம்பிகை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 15 ம் தேதி காப்பு கட்டி துவங்கியது. தினமும் மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் இரவு உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலாவும் நடந்து வருகிறது. இன்று 6 ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு ஊரணி பொங்கல் வைத்து, மாவிளக்கு தீபம் ஏற்றி பெண்கள் வழிபாடு நடத்தினர். அதைத் தொடர்ந்து நடந்த மகாதீபாராதனை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 21ம் தேதி காலை காத்தவராயன்- ஆரியமாலா திருக்கல்யாண வைபவமும் இரவு கழு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 22 ம் தேதி தீமிதி திருவிழா நடக்க உள்ளது. ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !