உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசக்தி சித்தர் பீடத்தில் ஆடி முதல் செவ்வாய் சிறப்பு பூஜை

சிவசக்தி சித்தர் பீடத்தில் ஆடி முதல் செவ்வாய் சிறப்பு பூஜை

சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே சிறுமலை அகஸ்தியர் புறம் வெள்ளிமலை அடிவாரத்தில் உள்ள சிவசக்தி சித்தர் பீடத்தில் ஆடி முதல் செவ்வாய் சிறப்பு பூஜைகள் நடந்தது.

சிறுமலை சிவசக்தி அம்மனுக்கு 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆராதனைகள் நடந்தது. இதில் சிறுமலை சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !