உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடாரண்யேஸ்வரர் கோவிலில் திருப்பணி மும்முரம்

வடாரண்யேஸ்வரர் கோவிலில் திருப்பணி மும்முரம்

திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் வளாகத்தை துாய்மை செய்து கோபுரங்களுக்கு பஞ்ச வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.


திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் உள்ளது.இந்த கோவிலில், விரைவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதை ஒட்டி கோவில் வளாகத்தை துாய்மை செய்து, 5 கோபுரங்களுக்கு பஞ்ச வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.தற்போது, கோவிலின் ராஜகோபுரத்திற்கு பின் அமைந்துள்ள மூன்று நிலை ராஜகோபுரத்திற்கு 7 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பில், பஞ்ச வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !