திருப்புல்லாணி, சேதுக்கரையில் கோயில் உண்டியல் எண்ணிக்கை
ADDED :1256 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலிலும் நேற்று காலை முதல் மாலை வரை உண்டியல் எண்ணும் பணி நடந்தது. பரமக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் கிரிதரன், பேஷ்கார் கண்ணன் உட்பட தன்னார்வலர்கள் உண்டியல் திறந்து காணிக்கைகளை எண்ணினர். இதில் இரு கோயில்களிலும் உள்ள உண்டியல் காணிக்கை ரூ.13 லட்சத்து 3491 வருமானமாக கிடைத்தது.