பரமக்குடி சுப்ரமண்ய சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார ஹோமம்
ADDED :1509 days ago
பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்ய சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார ஹோமம் நடந்தது.
இக்கோயிலில் காலை 7:00 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம் மற்றும் சண்முக அர்ச்சனை துவங்கியது. முன்னதாக அணுக்கை, விநாயகர் பூஜை, வருண பூஜை, பஞ்ச கவ்ய பூஜை, வேல் அர்ச்சனை நடந்தன. தொடர்ந்து சத்ரு சம்ஹார மூல மந்திர திரிசதி அர்ச்சனை ஹோமம் மற்றும் ஷண்ணவதீ ஹோமம் நிறைவடைந்து. பின்னர் மகாபூர்ணாகுதி நடந்தது. கடம் புறப்பாடாகி வள்ளி தேவசேனா சமேத முருகனுக்கு மகா திரவிய அபிஷேகம், கலச அபிஷேகம் நிறைவடைந்தது. தொடர்ந்து 12:00 மணிக்கு மகாதீப ஆராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.