உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரக்கடவுள் முருகன் கோயிலில் 108 சங்காபிஷேகம்

குமரக்கடவுள் முருகன் கோயிலில் 108 சங்காபிஷேகம்

கமுதி: கமுதி அருகே கொடுமலூர் குமரக்கடவுள் முருகன் கோயிலில் கார்த்திகை​ முன்னிட்டு பரமக்குடி சக்தி முருகன் கோயில் இருந்து பக்தர்கள் பறவை காவடி, பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக​ வந்தனர். பின்பு குமரக்கடவுள் முருகனுக்கு எலுமிச்சம், பழச்சாறு, திரவிய பொடி, நெல்லிப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், ஆரஞ்சு, மாதுளை, பழம் வகைகள், இளநீர் உட்பட 33 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்பு 108 சங்காபிஷேக தீர்த்தம் நடந்தது. சிவாச்சாரியார் நவநீதகிருஷ்ணன் தலைமையில் கணபதி ஹோமம் யாகசாலை பூஜை,சிறப்புபூஜை நடந்தது.கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !