உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை

சூலூர் முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை

சூலூர்: சூலூர் வட்டார முருகன் கோவில்களில் ஆடிக் கிருத்திகை பூஜை நடந்தது.

சூலூர் வட்டாரத்தில் உள்ள, சின்னியம்பாளையம் வேல்முருகன் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், அறுபடை முருகன் கோவில், கண்ணம்பாளையம் மற்றும் சூலூர் பழனியாண்டவர் கோவில்களில் ஆடிக்கிருத்திகையை ஒட்டி, பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நேற்று முன்தினம் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

திருவிளக்கு பூஜை: ஆடிக்கிருத்திகையை ஒட்டி, காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவிலில், உலக நலன் வேண்டி திரு விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று குத்துவிளக்குக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து, பழனியாண்டவருக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !