உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் புனித சந்தனமாதா ஆலய திருவிழா கொடியோற்றம்

காரைக்கால் புனித சந்தனமாதா ஆலய திருவிழா கொடியோற்றம்

காரைக்கால்: காரைக்காலில் புனித சந்தனமாதா ஆலய திருவிழா முன்னிட்டு கொடியேற்றத்துடன் துவங்கியது.

காரைக்கால் நெடுங்காடு செல்லும் சாலையில் உள்ள பிள்ளைத்தெருவாசல் புனித சந்தனமாதா ஆலயத்தின் ஆண்டு திருவிழா நேற்று தலைமை பங்கு தந்தை அந்தோணிராஜ் மற்றும் பங்கு குரு  சின்னப்பன் ஆகியோர் தலைமையில் கொடியோற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்திற்கு பின் சிறப்பு திருப்பலி நடந்தது. இன்று 25ம் தேதி மாவை 6 மணிக்கு சிறிய தேர்பவளி,அதைத்தொடர்ந்து நற்செய்தி  செபக்கூட்டம் நடந்தது. 26ம் தேதி மாலை 6மணிக்கு திருவிழா திருப்பலியும்,மின்விளக்கு அலங்கார தேர்பவனி நடக்கிறது. வரும் 27ம் தேதி திருப்பலி முடிந்து கொடியிறக்கும் நடக்கிறது. விழாவிற்கான  ஏற்பாடுகளை பங்கு தந்தைகள் மற்றும் பிள்ளைத்தெருவாசல் கிராம பஞ்சாயத்தார்கள் ஆரோக்கியதாஸ், சின்னப்பன்,அந்தோணிசாமி.தனபால் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.இதில்  ஏராளமான கிருஸ்துவமக்கள் கலந்துகொண்டு சந்தனமாதாவை வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !