திண்டிவனம் பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1256 days ago
திண்டிவனம்: திண்டிவனம் தீர்த்தகுளம் பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்வசம் நடந்தது.திண்டிவனம், தீர்த்தக்குளம் பாலமுருகன் கோவிலின் 39ம் ஆண்டு, ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, கடந்த 23ம் தேதி தீமிதி திருவிழா நடந்தது.பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பின், சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்வசமும், இடும்பன் பூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.