உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மை வேண்டி அரசு மற்றும் வேம்புக்கு திருக்கல்யாணம்

உலக நன்மை வேண்டி அரசு மற்றும் வேம்புக்கு திருக்கல்யாணம்

காரைக்கால்: காரைக்காலில் உலக நன்மை வேண்டி ஸ்ரீ புனித அரசு வேம்பு மகா விருட்சத்திற்கு திருகல்யாண வைபவம் மிக சிறப்பாக நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் தலத்தெருவில் பகுதியில் உள்ள ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாத சுவாமி ஆலயத்தில் அமைந்துள்ள திருநிறைச்செல்வன் அரசு (அரச மரம்), திருநிறைச்செல்வி வேம்பு (வேப்ப மரம்) திருக்கல்யாணம் வைதீக முறைப்படி உலக நன்மை வேண்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஒத அஸ்வத்த விவாகம் எனும் அரச மரத்திற்கும். வேப்ப மரத்திற்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நடைபெற்ற அரசுவேம்பு திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அரசு வேம்பு மரங்களுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது, திருக்கல்யாண வைபவத்தில் ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்,ஆலய அறங்காவலர் குழுவினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !