கேரளா சிவன் கோவிலில் நிஜ யானையை வைத்து கணபதி ஹோமம்!
ADDED :4824 days ago
கோட்டக்கல்: கேரள மாநிலம் கோட்டக்கல் அருகே உள்ள சிவன் கோவிலில், நிஜ யானையை வைத்து கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. வழக்கமாக விநாயகருக்கு கணபதி ஹோமம் நடத்தப்படும். விநாயகர் விக்ரகத்திற்கு முன், யாகக் குண்டம் வளர்த்து, அதில் திரவியப் பொருட்கள் நிவேதனமாக இடப்படும். இந்த கோவிலில் நடைபெற்ற கணபதி ஹோமத்தில், நிஜ யானைக்கு தேங்காய், அவல், சர்க்கரை, அப்பம், பழங்கள் போன்ற உண்ணக் கூடிய பொருட்கள் வழங்கப்பட்டன. அதற்கு பூஜையும் நடைபெற்றது. இத்தகைய பூஜைக்கு கஜ பூஜை என்று பெயர். தடைகளை நீக்கவும், எதிரிகளைப் பலவீனப்படுத்தவும் கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது.