மந்தை காளியம்மன் கோயில் திருவிழா
ADDED :1540 days ago
தாண்டிக்குடி , தாண்டிக்குடி மந்தை காளியம்மன் கோயில் விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தன. தொடர்ந்து பொங்கல் வைத்தல், அக்னி சட்டி எடுத்தல், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல் ஆகியன நடந்தன.அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர் .