உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி காந்தாரியம்மன் கோயில் முளைக்கொட்டு விழா

திருப்புல்லாணி காந்தாரியம்மன் கோயில் முளைக்கொட்டு விழா

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி, மொத்திவலசையில் காந்தாரியம்மன் கோயில் உள்ளது. முளைக்கொட்டு உற்ஸவ விழாவை முன்னிட்டு கடந்த ஜூலை 19 அன்று காப்பு கட்டுகளுடன் விழா துவங்கியது. நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. நேர்த்திக்கடன் பக்தர்களால் பால்குடம், அக்னிசட்டி, அலகு குத்தி எடுத்து வந்தனர். பெண்கள் பொங்கலிட்டனர். ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !