அரசாள வந்த அம்மன் கோவில் பூச்செரிதல் விழா
ADDED :1193 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, நேற்று இரவில், பூச்செரிதல் விழா நடைபெற்றது. முன்னதாக பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து, விரதம் இருந்த பக்தர்கள், பூக்களை கூடையில் ஊர்வலமாக கொண்டு சென்று மூலவர்களுக்கு மலர்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆர்.எஸ்.மங்கலம் இந்து சமய மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.