நத்தம் பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. மூலவர் கைலாசநாதர்க்கு பால்,பன்னீர் ,சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாவராதனைகள் நடந்தது. தொடர்ந்து நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைப்போலவே சிறுமலை அகஸ்தியர் புரத்தில் உள்ள சிவசக்தி சித்தர் பீடத்தில் பிரதோஷ விழா மற்றும் அன்னதானம் நடந்தது. அய்யாபட்டி சிவதாண்டவப்பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோவில், காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர்- 1008 சிவலிங்கம் கோயில், வேம்பார்பட்டி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷ விழா நடந்தது.