உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவகிரக கோட்டையில் பிரதோஷ வழிபாடு

நவகிரக கோட்டையில் பிரதோஷ வழிபாடு

பல்லடம்: சித்தம்பலம் நவகிரக கோட்டையில், உலக நலன் கருதி பிரதோஷ வழிபாடு நடந்தது. பல்லடம் அடுத்த சித்தம்பலம் நவக்கிரக கோட்டையில், பிரதி மாதம் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடந்து வருகிறது. நேற்று, உலக நலன் கருதி, ஆடி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. முன்னதாக, பிரதோஷ காலத்தில் சிறப்பு வேள்வி வழிபாடும், இதையடுத்து, நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. தொடர்ந்து, சிவபெருமானுக்கு பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !