சாரதா ஆசிரமத்தில் விவசாயம் செழிக்க வேண்டி முளைப்பாரி விழா
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் விவசாயம் செழிக்கவேண்டி முளைப்பாரி விழா நடந்தது.
உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் விவசாயம் செழிக்கவேண்டி ஆடி மாதத்தையொட்டி விவசாய பெரு விழாவான முளைப்பாரி விழா நடந்தது. முளைப்பாரி விழாவையொட்டி உளுந்தூர்பேட்டை, காட்டுநெமிலி, பள்ளியந்தாங்கல், புல்லூர், ஆர்.ஆர். குப்பம், குணமங்கலம், சாத்தனூர், எடைக்கல், ஆசனூர், பு.கொணலவாடி, மூல சமுத்திரம், வெள்ளையூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நெல் மற்றும் நவதானியங்களை முளைப்பாரி வைத்து 9 நாட்கள் விரதம் இருந்து ஸ்ரீ சாரதா ஆசிரமத்திற்கு முளைப்பாரியை எடுத்து வந்து வழிப்பட்டனர். பின்னர் ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில் ஸ்ரீ சாரதாம்பாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். வழிபாடு முடிந்து கிராம மக்கள் முளைப்பாரிகளை தங்களது நிலத்தில் விவசாயம் பெருக்குவதற்காக தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.