மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
ADDED :1246 days ago
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பொருட்கள் எண்ணும் பணி சிவகங்கை அறநிலையதுறை உதவி ஆணையர் செல்வராஜ், மடப்புரம் கோயில் செயல் அலுவலர் வில்வமூர்த்தி, அறங்காவலர் குழு தலைவர் பழனியப்பன் முன்னிலையில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். உண்டியல்களில் 19 லட்சத்து 67 ஆயிரத்து 26 ரூபாய் ரொக்கமும் , தங்கம் 135 கிராம், வெள்ளி 90 கிராமும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.