உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியபட்டினம் சந்தனக்கூடு விழா நிறைவு கொடியிறக்கம்

பெரியபட்டினம் சந்தனக்கூடு விழா நிறைவு கொடியிறக்கம்

பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு கந்தூரி விழாவின் நிறைவை முன்னிட்டு கொடி இறக்கம் நடந்தது.

கடந்த ஜூலை 6., அன்று தர்கா முன்புறமுள்ள மினாராவில் கொடி ஏற்றம் நடந்தது. ஜூலை 16., இரவு சந்தனக்கூடு விழாவை துவங்கியது. மறுநாள் ஜூலை 17., சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் தினமும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வழிபாட்டிற்காக வந்து சென்றனர். நேற்று மாலை 5:45 மணியளவில் தர்கா முன்புறமுள்ள மினாராவில் கொடி இறக்கம் செய்யப்பட்டது. மேளதாளங்கள் முழங்க நாட்டியக் குதிரைகள் நடனமாடும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சந்தனக்கூடு விழா கமிட்டியாளர்கள், சுல்தானியா சங்கம், இஸ்லாமிய நண்பர்கள் குழு, தர்கா கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !