உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசை : போடி கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி அமாவாசை : போடி கோயில்களில் சிறப்பு பூஜை

போடி: ஆடி அமாவாசையை முன்னிட்டு போடி அருகே அணைக்கரைப்பட்டியில் அமைந்துள்ள மரக்காமலை முனீஸ்வரன், லாடசன்னாசி கோயில், பிச்சாங்கரை ஸ்ரீ கைலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள், அன்னதானம் நடந்தது. போடி அருகே அணைக்கரைப்பட்டியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான மரக்காமலை மலைக் கோயிலில் அமாவாசை, பவுர்ணமி பூஜைகள் நடந்து வருகிறது. இங்கு வேண்டியவருக்கு வேண்டிய வரம் கிடைப்பதாக ஐதீகம். இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு மலைக்கோயிலில் உள்ள முனீஸ்வரன், லாட சன்னாசிராயருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

* போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களால் கட்டப்பட்ட ஸ்ரீ கைலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி பூஜைகளும் நடந்து வருகின்றன. இங்கு வேண்டி வணங்கினால் கால சர்ப்ப தோஷம், ராகு, கேது நிவர்த்தி, திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது என்பது ஐதீகம். இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள், அன்னதானமும் வழங்கப்பட்டது.

* மேலச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயிவில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள், அன்னதானமும் வழங்கப்பட்டது.

*போடி கொண்டரங்கி மல்லையசுவாமி கோயில், சுப்பிரமணியர் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !