அன்னூர் அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, அம்மன் கோவில்களில், சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இன்று ஆடி வெள்ளியை முன்னட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பல நூறு ஆண்டுகள் பழமையான அன்னூர் பெரிய அம்மன் கோவிலில் நேற்று மதியம், அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. அலங்காரத்தில், பெரிய அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னூர், தென்னம்பாளையம் ரோடு, மாரியம்மன் கோவிலில், மதியம் 12:00 மணிக்கு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருந்தவச் செல்வி அம்மன் சன்னதி, கஞ்சப்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோவில், பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில், கோவில்பாளையம் கவைய காளியம்மன் கோவில், உள்ளிட்ட கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று ஆடி வெள்ளியை முன்னட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.