உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகஸ்தியர் கோயிலில் ஆடிக்கார்த்திகை வழிபாடு

அகஸ்தியர் கோயிலில் ஆடிக்கார்த்திகை வழிபாடு

விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் அகஸ்தியர் கோயில் ஆடிக்கார்த்திகை சிறப்பு வழிபாடு நடந்தது.பாபநாசம் அகஸ்தியர் அருவி கோயிலில் ஆடிக்கார்த்திகையை முன்னிட்டு சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை மற்றும் அகஸ்தியர் சுவாமிகளுக்கு காலை 8 மணிக்கு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. 11 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி எழுந்தருளலும், அன்னதானமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோயில் கார்த்திகை கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !