உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி திருக்கல்யாணம் விழா : ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தல்

ஆடி திருக்கல்யாணம் விழா : ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தல்

ராமேஸ்வரம்: ஆடி திருக்கல்யாண விழாவி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அம்மன் வீதி உலா நாளில் நடை சாத்தப்படுகிறது.

ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா ஜூலை 23ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இன்று (ஜூலை 30) கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடானதும், மாலை 4 :30 முதல் இரவு 10 மணி வரை கோயில் நடை சாத்தப்படும்.ஆக., 2ல் ஆடித் தபசு விழா யொட்டி நள்ளிரவு 2 மணிக்கு கோயில் நடை திறந்து 3 மணி முதல் 3:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், இதன்பின் கால பூஜையும் நடக்கும். அன்று காலை 6 மணிக்கு மேல் கோயிலில் இருந்து அம்மன் வெள்ளி கமல வாகனத்தில் தபசு மண்டபத்திற்கு புறப்பாடானதும், கோயில் நடை சாத்தப்படும். அன்று மாலை 3 மணிக்குள் தபசு மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றும் வைபவம் முடிந்ததும், கோயிலுக்கு மாலை 5 மணிக்கு சுவாமி, அம்மன் திரும்பியவுடன் நடை திறக்கப்படும். இதன்பின் வழக்கமான பூஜைகள் நடக்கும்.

ஆக., 6ல் கோயிலில் அம்மனுக்கு மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடக்க உள்ளதால் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடை சாத்தப்படும். ஆக.,8ல் நள்ளிரவு 2 மணிக்கு கோயில் நடை திறந்து, நள்ளிரவு 2:30 மணி முதல் 3 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், அதனைதொடர்ந்து கால பூஜையும் நடக்கும். பின் காலை 6 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடானதும், கோயில் நடை சாத்தப்பட்டு இரவு 10 மணிக்கு திறக்கப்படும். பின் அர்த்தசாம பூஜை நடந்ததும், கோயில் நடை சாத்தப்படும் என கோயில் துணை ஆணையர் மாரியப்பன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !