உடுமலை காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ துர்கா ேஹாமம்
ADDED :1170 days ago
உடுமலை: காமாட்சி அம்மன் கோவிலில் நடந்த ஸ்ரீ துர்கா ேஹாமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். உடுமலை நேரு வீதி காமாட்சி அம்மன் கோவிலில், ஆடி மாத சிறப்பு நிகழ்ச்சிகள் கடந்த 22ம் தேதி முதல் துவங்கியது. அன்று மகாலட்சுமி ேஹாமமும், லலிதா சகஸ்ரநாம குங்கம அர்ச்சனை நடந்தது.கடந்த 26ம் தேதி ஸ்ரீ தன்வந்திரி ேஹாமம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு ஸ்ரீ துர்கா ேஹாமம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி மாத சிறப்பு நிகழ்ச்சிகள் அடுத்தமாதம் 16ம் தேதி வரை நடைபெறுகிறது.இதே போல், எலையமுத்துாரில் லட்சுமி நாராயணசாமி கோவிலில், மகா சண்டி ேஹாமம் நடந்தது. இதில், எலையமுத்துார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.