கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் ஆடி சனிக்கிழமை சிறப்பு பூஜை
ADDED :1168 days ago
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவி அம்மன் கோவிலில் ஆடி சனிக்கிழமை ஒட்டி சிறப்பு பூஜை நடந்தது.
பூஜையை ஒட்டி கதிர் நரசிங்க பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி அம்மன்கள், மூலவர் ராமானுஜர் சுவாமிக்கும் பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திண்டுக்கல், சாணார்பட்டி, கோபால்பட்டி, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.