உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விரிஞ்சிபுரம் கோவிலில் சுவாமி சிலை கண்டெடுப்பு

விரிஞ்சிபுரம் கோவிலில் சுவாமி சிலை கண்டெடுப்பு

வேலுார்: வேலுார், விரிஞ்சிபுரம் கோவிலில் பள்ளம் தோண்டியபோது சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.


வேலுார் மாவட்டம், விரிஞ்சிபுரத்திலுள்ள மார்க்கபந்தீஸ்வரர் கோவில் குளக்கரை அருகே, அன்னதான கூடம் கட்டும் பணி சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இதற்காக அஸ்திவாரம் அமைக்க கட்டட தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு குழி தோண்டினர். அப்போது அதில் சுவாமி சிலை இருந்துள்ளது. தகவலின்படி வந்த அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள், கோவில் செயல் அலுவலர் சங்கர் ஆகியோர் நேற்று, அந்த சுவாமி சிலையை ஆய்வு செய்தபோது, அது, நான்கு அடி உயர தட்சணாமூர்த்தி கற்சிலை என தெரிந்தது. பின், கோவில் வளாகத்தில் அச்சிலை வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !