காளஹஸ்தி சிவன் கோயிலில் கர்நாடகா அமைச்சர் தரிசனம்
ADDED :1539 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு கர்நாடகா மாநில எரிபொருள் மற்றும் கனடா கலாச்சாரத்துறை அமைச்சர் சுனில் குமார் குடும்பத்தார் ரோடு நேற்று காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோலா .ஆனந்த் மற்றும் கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர். பின்னர் கோயிலுக்குள் சென்றவர்கள் சிறப்பு ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்ததோடு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்தனர். பின்னர் கோயில் சார்பில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.