மயிலம் மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
ADDED :1167 days ago
மயிலம் : மயிலம் அடுத்த விளங்கம்பாடி மாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவத்தையொட்டி செடல் திருவிழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி வாகனங்களை இழுத்து வந்தனர். பின், கோவில் வளாகத்தில் செடல் உற்சவம் நடந்தது. கோவில் வளாகத்தில் பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர். இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.