உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்

பண்ருட்டி : திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடந்தது. பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினசரி மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சுவாமி உள்புறப்பாடு நடந்தது.நேற்று ஆடிப்பூர தேேராட்டம் காலை 8:00 மணிக்கு நடந்தது. அம்பாள் பெரியநாயகி, விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருடன் திருத்தேரில் அருள்பாலித்தார்.பண்ருட்டி சேர்மன் ராஜேந்திரன், கோவில் செயல்அலுவலர் மகாதேவி உட்பட ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இன்று மாலை ஆடிப்பூர வளையல் அலங்காரம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !