புவனகிரி வெட்காளியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்
ADDED :1166 days ago
புவனகிரி : புவனகிரி தாலுகா மருதுார் அருகே தலைக்குளம் வெட்காளியம்மன் அமாவாசை மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.நிகழ்ச்சியை முன்னிட்டு வெட்காளியம்மனுக்கு பல்வேறு திரவிங்கள் மற்றும் நறுமணப் பொருட்களால் திறப்பு அபிேஷகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்குப் பின், அம்மன் பார்வதி கோலத்தில் சூலத்தை கையில் ஏந்தி ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.