திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்
தஞ்சாவூர், திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தருமையாதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் சமேத தர்மசம்வர்த்தனி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பூர விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடிப்பூர விழா கடந்த 23ம் தேதி காலை தர்மசம்வர்த்தினி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையும், மாலையும், சாமி புறப்பாடு நடைபெற்றது. 28ம் தேதி ஆடி அமாவாசை நாளில் ஐயாறப்பர் கோவில் தென்கைலாயத்தில் அப்பர் கயிலைக்காட்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிழ்வான ஆடிப்பூர தேரோட்டம் இன்று(31ம் தேதி) காலை நடந்தது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் தேர் உலா வந்தது. தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். நாளை காலை ஆடிப்பூரம் காவிரியில் தீர்த்தம் மற்றும் கொடியேறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சொக்கநாத தம்பிரான் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் செய்து இருந்தனர்.