ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரம் விழா ஜூலை 24ல் கொடியேற்றத்துடன் துவங்கி விழாவில் முக்கிய நிகழ்வுகளான பெரியாழ்வார் மங்களாசாசனம், ஐந்து கருட சேவை, சயன சேவை நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்டம் இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை 05:00 மணிக்குமேல் ஆண்டாள், ரெங்கமன்னார் திருத்தேருக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9:05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி துவங்கியது. இதில் தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, கோவில் பட்டர்கள் செய்துள்ளனர். இதனை முன்னிட்டு நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் பல்வேறு அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட அரசு நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.