உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்ணாடம் அருகே அம்மன் கோவிலில் திருட்டு

பெண்ணாடம் அருகே அம்மன் கோவிலில் திருட்டு

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே, அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை மற்றும் உண்டியலை, மர்ம நபர்கள் திருடிச் சென்ற துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 22ம் தேதி ஆடித் திருவிழா துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு வழக்கம் போல கிராம மக்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது, கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் அணிந்திருந்த 2 சவரன் தாலி மற்றும் எவர் சில்வர் குடத்திலான இரண்டு உண்டியல்கள் மாயமாகி இருந்தன. தகவலறிந்த பெண்ணாடம் எஸ்.ஐ., தீபன், தனிப்பிரிவு ஏட்டு தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.உண்டியலில் காணிக்கை பணம் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதுபோல, 24ம் தேதி, பெண்ணாடம் மேற்கு ரத வீதியில் உள்ள பெருமாள் கோவிலில், மர்ம நபர்கள் உண்டியல் காணிக்கையை திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.கோவில்களில் நடக்கும் தொடர் திருட்டுகள், இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !