பானையங்கால் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா
ADDED :1161 days ago
தியாகதுருகம்: பானையங்கால் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. தியாகதுருகம் அடுத்த பானையங்கால் கிராமத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 23 ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மன் திருவீதி உலா நடந்தது. கோயில் வளாகத்தில் மகாபாரத சரித்திர சொற்பொழிவு நடந்தது. நேற்று முன்தினம் அரவான் களப்பலி மற்றும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அலங்கரிக்கப்பட்ட திரவுபதி அம்மன், அர்ஜுனன் உற்சவர் சிலைகளை தேரில் வைத்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். மாலை 5:00 மணிக்கு தீ மிதித்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.