எத்தனை சிறிய பறவைக்கு
ADDED :1176 days ago
பறவைகள் என்றாலே அழகுதான். ஆனால் அவற்றில் சில சாகசங்களையும் செய்யும். அதாவது பல ஆயிரம் கி.மீ., துாரம் கடந்து ஒரு நாட்டிற்கு செல்லும். அதுவும் ஒரே மூச்சில் கடலையே தாண்டிவிடும். இது எப்படி சாத்தியம் என பலரும் நினைக்கலாம். இதற்கு காரணம் ஒற்றுமை. ஆம்! இவை ஒன்றாக ஒரே கூட்டமாக பறக்கும்போது, அதனின் பறக்கும் சக்தி இரண்டு மடங்கு கூடுகிறது.
பார்த்தீர்களா.. ஒற்றுமையால் தானே இந்த சாதனை நிகழ்கிறது. அதுபோல் நாமும் ஒற்றுமையாக வாழ்ந்தால், எதுதான் சாதிக்க முடியாது? எத்தனை சிறிய பறவைக்கு... எத்தனை பெரிய அறிவிருக்கு! என்பது உண்மைதானே.