எதற்கும் தயாராக இரு
என்கிறார் வாரியார்
* வாழ்க்கையில் ஏற்றமும் வரும். இறக்கமும் வரும். எதற்கும் தயாராக இரு.
* அற நுால்களை படி. இதுவே உன்னை உயர்நிலைக்கு அழைத்துச் செல்லும்.
* பிறர் போற்றினால் மகிழ்ச்சி அடையாதே. பிறர் துாற்றினால் வருந்தாதே.
* ஆசை ஒருவனை அழிக்கும் குணம் கொண்டது. ஆனால் அன்பு வளர்க்கும் குணம் கொண்டது.
* பிறருடைய குற்றங்களை ஆராயாதே. உன்னுடைய குற்றங்களை மறைக்காதே.
* உன் எண்ணத்தை பொறுத்துதான், உனது வாழ்வானது தீர்மாணிக்கப்படுகிறது.
* தர்மவழியில் தேடிய செல்வம் பல தலைமுறைக்கும் பயன் தரும்.
* மனிதனையும், விலங்கையும் பிரித்துக் காட்டும் கருவி ஒழுக்கம்.
* அன்பினால் கடவுளை வணங்கு. அவரிடம் வியாபாரம் செய்யாதே.
* மானம் காக்க ஆடையும், மனதைக் காக்க வழிபாடும் அவசியம்.
* பெற்றோரை விட சிறந்தவர் யாருமில்லை.
* ஞானிகளைப் பழித்தவன் மறுபிறப்பில் பைத்தியமாகப் பிறப்பான்.
* உறவினர் உன்னை கைவிட்டால்கூட, நீ செய்த தர்மம் கைவிடாது.
* புத்தகத்தால் வரும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானது.
* எல்லாம் தெரிந்தவர்களும் இல்லை; எதுவுமே தெரியாதவர்களும் இல்லை.