உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உளுந்தூர்பேட்டை சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அணிவித்தல்

உளுந்தூர்பேட்டை சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அணிவித்தல்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. உளுந்தூர்பேட்டை நகராட்சி கிழக்கு கந்தசாமிபுரத்தில் உள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரம் விழாவையொட்டி சுவாமிக்கு வளையல் அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !