பண்ணாரியம்மன் கோவிலுக்கு பேட்டரி வாகனம் வழங்கப்பட்டது
ADDED :1166 days ago
ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலுக்கு பண்ணாரியம்மன் சுகர்ஸ் குழுமத்தின் சார்பில் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டது.பண்ணாரியம்மன் கோவிலுக்கு வரும், முதியோர்,மாற்றுத்திறனாளிகளை அழைத்து செல்லும் விதமாக 6லட்சம் மதிப்பிலான பேட்டரி வாகனத்தை இன்று பண்ணாரியம்மன் சுகர்ஸ் குழுமத்தின் சார்பில் அதன் தலைவர் பாலசுப்பிரமணியம் கோவிலுக்கு இலவசமாக வழங்கினார்.உடன் பண்ணாரியம்மன் குழுமத்தின் பொருளாளர் விஜயகுமார்,கல்லுாரி முதல்வர் பழனிச்சாமி,மற்றும் கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள்,அறங்காவலர்கள் இருந்தனர்.